1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (19:38 IST)

பூடானில் முதல்முறையாக ஊரடங்கு: பொதுமக்கள் அதிர்ச்சி

பூடானில் முதல்முறையாக ஊரடங்கு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பதும் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்தியாவின் அண்டை நாடான நாடுகளில் ஒன்றான பூடான் நாட்டில் இதுவரை கொரனோ வைரஸ் பாதிப்பு ஓரளவுக்கு இருந்தாலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை 
 
இந்த நிலையில் தற்போது பூட்டானில் 113 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்நாட்டின் முதல் முறையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது 
 
கொரோனா வைரஸ் தேசிய அளவில் பரவாமல் இருப்பதற்காக பூடான் அரசு இந்த ஊரடங்கு அறிவித்துள்ளதாகவும் இதனை அடுத்து பள்ளி கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் வணிக வளாகம் மூட உத்தரவிட்டு இருப்பதாகவும் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பூடானின் முக்கியமான வருமானமே  சுற்றுலா வருகைதான் என்ற நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சுற்றுலாவை நம்பி வருமானம் செய்த பல மக்கள் வருமானம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது