திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (19:20 IST)

ரஷ்யாவின் துணை பிரதமருக்கு கொரோனா உறுதி!

உலகெங்கும் கொரோனா பாதிப்பால் பல நாடுகளின் அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ரஷ்யாவின் துணை பிரதமர் யூரி ட்ருட்னெவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகெங்கும் 2 கோடிக்கும் மேலானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர ஆய்வில் போராடி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவில் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று ரஷ்யாவின் துணை பிரதமர் யூரி ட்ருட்னெவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.