1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Fire accident in Trump tower

டிரம்ப் டவரில் தீ விபத்து: நியூயார்க்கில் பரபரப்பு!

டிரம்ப் டவர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் ஆவதற்கு முன்பு அமெரிக்காவில் பிரபல வர்த்தகராக இருந்தார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வந்தார்.
இவருக்கு சொந்தமான 58 மாடி கட்டிடம் நியூயார்க்கில் மேன் காட்டன் மிட்டவுன் பகுதியில் உள்ளது. இதில், டிரம்ப் நிறுவனங்களின் தலைமை அலுவலக கட்டிடம், வர்த்தக நிறுவனங்கள், டிரம்பின் சொகுசு மாளிகை, அவரது மகன், மகளின் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.
 
இக்கட்டிடம் 664 அடி (202 மீட்டர்) உயரம் கொண்டது. இந்நிலையில் இக்கட்டிடத்தின் 50வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 
 
இந்த விபத்தில், 67 வயது முதியவர் ஒருவர் மரணமடைந்தார். மேலும், 4 தீயணைப்பு படை வீரர்களும் காயம் அடைந்தனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
எஞ்சின் இல்லாமல் 10 கிமீ ஓடிய எக்ஸ்பிரஸ் ரயில்: வைரல் வீடியோ!