1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (10:18 IST)

அமெரிக்காவில் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்படும் கருப்பு இனத்தவர்கள்

அமெரிக்காவில்  இரும்பு குழாயை துப்பாக்கி என நினைத்து கருப்பு இனத்தவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் கலிபோர்னியா மாகாணத்தில் கருப்பு இனத்தவர் ஒருவர் தன் கையில் வைத்திருந்த ஐபோனை துப்பாக்கி என நினைத்த போலீசார் அவரை சரமாரியாக சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார். பிறகு அவர் கையில் இருந்தது துப்பாக்கி இல்லை ஐபோன் என தெரிந்தது. இதனால் போலீஸாரைக் கண்டித்து கருப்பு இனத்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த பரபரப்பு சம்பவம் அடங்குவதற்கு உள்ளேயே அமெரிக்காவில் இன்னொரு கருப்பு இனத்தவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்க வாழ் கருப்பு இனத்தவரான ஷாகித் வாஷெல்(34), நியூயார்க் மாகாணம் புரூக்ளின் நகரில் வேலை பார்த்து வந்தார். ஷாகித் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் தன் கையில் இரும்பு குழாய் ஒன்றை வைத்திருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் ஷாகித் கையில் இருந்தது துப்பாக்கி என நினைத்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் ஷாகித்தை சுற்றி வளைத்தனர். இதனால் செய்வதறியாது ஷாகித் திகைத்து நின்றார். அவர் தனது கையில் இருந்த இரும்பு குழாயை போலீசாரிடம் காட்டுவதற்காக  நீட்டினார். ஷாகித் தங்களை துப்பாக்கியால் சுட முற்படுகிறார் என நினைத்த போலீஸார் ஷாகித்தை சரமாரியாக சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார். பிறகு அவர் கையில் இருந்தது துப்பாக்கி இல்லை இரும்பு குழாய் என தெரிந்தது. இச்சம்பவம் அமெரிக்காவில் வாழும் கருப்பு இனத்தவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.