1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (11:35 IST)

உலகில் முதல் முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட்.. பின்லாந்து அசத்தல்..!

உலகிலேயே முதல்முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்து பின்லாந்து அரசு அசத்தியுள்ளது. 
 
உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் பாஸ்போர்ட் என்பது புத்தக வடிவில் இருக்கும் நிலையில் பின்லாந்து முதல் முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்துள்ளது.  
 
விமான நிலையங்களில் பயணிகள் காத்திருக்கும் நேரத்தை டிஜிட்டல் பாஸ்போர்ட் குறைத்துள்ளதாகவும் பயணிகள் பயணிகள் மிக எளிமையாக பயணம் செய்ய முடியும் என்றும்  பின்லாந்து அரசு அறிவித்துள்ளது.  
 
சில நகரங்களில் மட்டும் தற்போது டிஜிட்டல் பாஸ்போர்ட் சோதனை முயற்சியாக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இனி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விரைவில் டிஜிட்டல் பாஸ்போர்ட் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran