1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (15:14 IST)

பாஸ்போர்ட் கோரி நளினி தொடர்ந்த வழக்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த நளினி சமீபத்தில் வெளியான நிலையில் அவர் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தார்.  
 
இந்த விண்ணப்பம் குறித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
லண்டனில் உள்ள தனது மகளை காண செல்ல வேண்டும் என்றும் அதற்கு ஏதுவாக பாஸ்போர்ட் வேண்டும் என்றும் கடந்த ஜூன் மாதம் நளினி விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு இன்னும் பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை. 
 
இந்த நிலையில் காவல்துறை சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்து பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அறிக்கை அளித்து காவல்துறை பதிலளித்து உள்ள நிலையில் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி நளினி பாஸ்போர்ட் குறித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Siva