இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் உரிமையை நம்ப முடியாத தொகைக்குக் கைப்பற்றிய பிரபல ஓடிடி…!
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படம் தொடங்கப்பட்டு சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
விரைவில் மொத்த ஷூட்டிங்கும் முடிந்து படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இப்போது இந்த படத்தின் அனைத்து மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை இந்தியாவில் எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு சுமார் 220 கோடி ரூபாய்க்கு படம் விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.