வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 13 ஜூலை 2019 (10:54 IST)

ஃபேஸ்புக் மூலம் திருடப்பட்ட தகவல்: மார்க்கிற்கு விதித்த அபராதம்

சமூக வலைத்தளங்களுக்கான விதிகளை மீறி, பயனாளர்களின் தகவல்களை திருடியதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு, 3 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர், வாட்ஸ் ஆப்-ஐ தொடர்ந்து, சமூக வலைத்தள பயனாளர்களை பெரிதும் கவர்ந்துள்ள செயலி ஃபேஸ்புக். இந்த செயலி உலகளவில் புதிய நண்பர்களை உருவாக்கவும், வணிக தொடர்பான தேவைகளுக்கும் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பயனாளர்களின் ரகசிய தகவல்களை திருடியதற்காக, ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. ”கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா” எனும் அரசியல் ஆலோசனை நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் பயனாளர்களின் ரகசிய தகவல்களை திருடிக் கொடுத்ததாக ஃபேஸ்புக் நிறுவனம் மீது புகார் எழுந்தது.

இந்த புகாரை ஏற்றுகொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், தகவலை திருடியதற்காக மன்னிப்பு கூறியது. இந்த புகாரின் முழு விவரம் அறிய அமெரிக்க வர்த்தக ஆனையம் கடந்த மார்ச் மாதம் விசாரனையை தொடங்கியது.

இந்த விசாரணையில், கடந்த 2011 ஆம் ஆண்டு மேற்கொண்ட தனிப்பட்ட நபர்களின் தகவல்களை கசிய விடுவதில்லை என்ற உடன்பாட்டை மீறியதற்காக 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது. ஒரு தொழில்நுட்ப நிறுவனம், பயனாளர்களின் ரகசிய தகவல்களை திருடியதால், இவ்வளவு பெரிய தொகையை செலுத்த இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.