புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2019 (14:05 IST)

டிரம்பை விளாசித் தள்ளிய அமெரிக்கர்கள்: நடந்தது என்ன?

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறித்து அமெரிக்க மக்களிடம்  நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில், டிரம்பிற்கு நேர்மை என்றால் என்னவென்றே தெரியாது என கூறியுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமான ’கேலப்’, ஜனாதிபதி டிரம்ப் குறித்து சமீபத்தில் அமெரிக்க மக்களிடம் கருத்துகணிப்பு நடத்தியது.

அந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 6 சதவீதம் பேர், டிரம்ப் ஒரு வலுவான மற்றும் நேர்மையான தலைவர் என கூறியுள்ளனர். ஆனால் மீதமுள்ள பலரும் ட்ரம்பிற்கு நேர்மை என்றால் என்னவென்றே தெரியாது எனவும், அவர் வலுவான தலைவர் இல்லை எனவும் கூறியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு டரம்ப் பல மேடைகளில் இனவாத அடிப்படையில் சில இனக்குழுக்களை அமெரிக்கர்களாக ஏற்றுகொள்ளமுடியாது என கூறிவந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் சமீபத்தில், சிறுநீரகம் இருதயத்தில் இருக்கிறது என்று ஒரு பொது மேடையில் பேசிய ஒன்று சமூக வலைத்தளத்தில் கேலி செய்யப்பட்டு வைரலானது குறிப்பிடத்தக்கது.