1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (15:55 IST)

வெளிநாடுகளில் அஜித் மார்க்கெட்டை விரிவுபடுத்திய துணிவு!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன துணிவு திரைப்படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றது. துணிவு திரைப்படம் நேற்று அதிகாலை 1 மணிக்கு தமிழகத்தில் வெளியானது. படம் வெளியானது முதல் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் வழக்கமான வெளிநாடுகளில் அஜித் படத்துக்கு கிடைக்கும் வசூலை விட இந்த படத்துக்கு அதிக வசூல் முதல்நாளில் கிடைத்துள்ளதாம். படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதும், லைகா செய்த மார்க்கெட்டிங்கும் மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது.