1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 22 செப்டம்பர் 2022 (19:56 IST)

மார்க் ஜுக்கர்பெர்க் மூன்றாவது குழந்தை: ஃபேஸ்புக்கில் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

mark
பேஸ்புக் நிறுவனர் மார்க்  ஜுக்கர்பெர்க் அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தை இருக்கும் நிலையில் மூன்றாவது குழந்தையை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
பேஸ்புக் நிறுவனர் மார்க்  ஜுக்கர்பெர்க் தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய வரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் எங்கள் குழந்தைகள் ஒரு புதிய சகோதரியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்
 
தனது மனைவி பிரிசில்லா தற்போது கர்ப்பிணியாக இருப்பதாகவும் அவருக்கு இன்னும் சில மாதங்களில் பெண்குழந்தை பிறக்கும் என்றும் மார்க் ஜூக்கர்பெர்க் கூறியுள்ளார். இதனை அடுத்து பேஸ்புக் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்