வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 3 ஜூலை 2019 (12:56 IST)

பேஸ்புக் அலுவலகத்தில் மர்ம பார்சல் – அதிகாரிகள் அதிர்ச்சி

நேற்று பேஸ்புக் அலுவலகத்துக்கு வந்த மர்ம பார்சலால் ஊழியர்கள் எல்லாரும் வெளியேற்றப்பட்டார்கள். போலீஸ் அதிகாரிகள் பார்சலை பறிமுதல் செய்து சோதனை நடத்தி வருகின்றனர்.

உலகத்தில் சமூக வலதளங்களில் முன்னனியில் இருப்பது பேஸ்புக். இந்த நிறுவனத்தின் அலுவலகம் நியூயார்க்கில் உள்ளது. தினமும் சில நூறு பார்சல்களாவது இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்காக வரும். அதேபோல் நேற்றும் சில பார்சல்கள் வந்தன. அதில் ஒரு பார்சலை சோதனையிட்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதற்குள் கண்ணாடி குடுவைக்குள் திரவம் போன்ற ஒரு பொருள் இருந்தது. உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்தனர் ஊழியர்கள். அந்த திரவத்தை பரிசோதித்து பார்த்த அதிகாரிகள் அது மயக்கமூட்ட கூடிய கெமிக்கல் என கண்டறிந்தனர்.

இந்த வகை மயக்க மருந்துகளை உடைந்து ஏற்படும் புகையால் மயக்க நிலைக்கும், பித்த நிலைக்கும் ஊழியர்கள் தள்ளப்படுவார்கள். இதை ஒருவேளை ஊழியர்கள் திறந்திருந்தால் அனைவரும் மயக்கமடைந்திருப்பர். இவர்களை மயக்கமடைய செய்து யாரோ உள்ளே நுழைய திட்டமிட்டிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

உடனடியாக பேஸ்புக் அலுவலகத்தின் இரண்டு தளங்களில் இருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.