புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 மார்ச் 2024 (19:19 IST)

நியூயார்க் டைம்ஸ் சதுக்க திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஈஷா மகாசிவராத்திரி வீடியோ!

Shivratri
நியூயார்க் டைம்ஸ் சதுக்க திரையில் ஈஷா மஹாசிவராத்திரி வீடியோ  ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த நியூயார்க் நகரவாசிகள் "ஹர ஹர மகாதேவ்" என்ற பாடலுக்கு ஆடி மகிழ்ந்தனர்.


 
கடந்த திங்கட்கிழமை இரவு, "சத்குருவுடன் மஹாசிவராத்திரியின் மகிழ்வான காணொளி - உலகில் அதிகம் பார்க்கப்பட்ட மஹாசிவராத்திரி நிகழ்வு" என்ற செய்தி நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தின் திரைகளை ஒளிரச் செய்தது.

இது குறித்த வீடியோவை சத்குரு அவர்கள் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் "டைம்ஸ் சதுக்கம், நியூயார்க் மகாசிவராத்திரியை வரவேற்கிறது. மனித ஆற்றலை மேம்படுத்தும் கொண்டாட்டமாகவும், மாற்றத்திற்கான வாய்ப்பாகவும் இருக்கும் சிவனின் மகத்துவம் வாய்ந்த இரவின் முக்கியத்துவத்தை உலகம் உணர்ந்து வருகிறது. நாம் இதனை நிகழச் செய்வோம்." என்று பதிவிட்டுள்ளார்.