ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 24 ஜனவரி 2024 (20:45 IST)

வில்லியாக நடிக்க விரும்பும் கத்ரினா கைஃப்

மெரி கிறிஸ்துமஸ் பட விழாவில் கலந்துகொண்ட கத்ரினா கைஃப் ‘வருங்காலத்தில் சினிமாவில்   நெகட்டிவ் கேரக்டர்களில் நடிக்க விரும்புவதாக’ தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை கத்ரினா கைஃப். இவர் நியூயார்க்,  மேரே பிரதமர் கி துல்ஹன், ராஜ நீதி, ஏக் தா டைகர், பேங் பேங், ஜிந்தா ஹை, சூயவன்ஷி, டைகர் 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தீல், ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, கத்ரினா கைப் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் மெரி கிறிஸ்துமஸ். இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று தியேட்டரில் ஓடி வருகிறது.

இந்த நிலையில், மெரி கிறிஸ்துமஸ் பட விழாவில் கலந்துகொண்ட கத்ரினா கைஃப் ‘வருங்காலத்தில் சினிமாவில்   நெகட்டிவ் கேரக்டர்களில் நடிக்க விரும்புவதாக’ தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

உங்களின் 20 வயதில் இருந்ததுபோல் நீங்கள் 30 வயதில் இருக்கப்போவதில்லை,. சில அனுபவங்களுடன் நீங்கள் முன்னேறி இருப்பீர்கள், அதுபோலத்தான் இந்த வேலையும், வயது அதிகரிக்கும்போது, இயல்பாகவே, உங்களின் விரும்பங்களும் மாறுபடும் என்று தெரிவித்துள்ளார்.