1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (16:05 IST)

ஆங்கில மொழிக்கு தடை.. மீறி பயன்படுத்தினால் ரூ.89 லட்சம் அபராதம்: இத்தாலியில் புதிய சட்டம்..!

உலகம் முழுவதும் ஆங்கில மொழி பரவியிருக்கும் நிலைகள் இத்தாலி நாட்டில் ஆங்கிலம் உள்பட வெளிநாட்டு மொழிகளுக்கு தடை விதிக்கும் புதிய சட்டம் இயற்றப்பட இருப்பதாகவும் இந்த சட்டம் இயற்றப்பட்டவுடன் ஆங்கில மொழியை பயன்படுத்தினால் ரூ.89 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
இத்தாலி நாட்டில் அதிகார தகவல் தொடர்புகளில் ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளை பயன்படுத்துவது தடை செய்யும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
இத்தாலி பிரதமரின் பிரதர்ஸ் ஆப் இத்தாலி என்ற கட்சி இந்த புதிய சட்டத்தை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சட்டத்தின்படி இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கள் அதிகாரபூர்வ தகவல் பரிமாற்றத்தின் போது இத்தாலி மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆங்கிலம் அல்லது வேறு மொழியை பயன்படுத்தினால் ஒரு லட்சம் யூரோ அபராதம் செலுத்த வேண்டும். இதன் மதிப்பு இந்திய மதிப்பில் 89 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த சட்டம் இத்தாலி பிரதிநிதிகள் சபையிலும் அறிமுகப்படுத்தப்பட்டதால் அந்நாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva