1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 13 மார்ச் 2023 (20:13 IST)

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 7 வாரத்தில் ரூ.5.93 கோடி அபராதம் வசூல்

சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த 7 வாரத்தில் மட்டும் ரூ.5.93 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

சென்னை மாநகரில் சாலைகுடிபோதைஉகளில் ஏற்படும் விபத்தைக் குறைக்கும் வகையில் போக்குவரத்துக் காவல்துறை செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், போக்குவரத்து விபத்து ஏற்பட முக்கியக் காரணமாக இருப்பது மதுபோதையில் வாகனம் ஓட்டுவதாகவும். எனவே, குடிபோதையில் வாகனம் ஓட்டினால் சட்டத்தில் தண்டனை வழங்கப்படுகிறது. அபாராத்தொகை ரூ.10, 000 ஆகும்.

இந்த நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர்கள், விதிமீறலில் ஈடுபட்டவர்களின்   நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி, சென்னையில் உள்ள 10 இடங்களில் அமைந்துள்ள கால் சென்டர்கள் மூலம் உரிய நபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 05-03-23 ஆம் தேதி முதல் 11-03-23 வரை அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகள் முடித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி, சென்னையில் 545 பேர்  நேரில் ஆஜராகி    நிலுவையிலுள்ள வழக்குகளை இணையம் மூலம் செலுத்தினர். சிலர் அழைப்பு மையங்களுக்கு  வெளியிலும் பணம் செலுத்தினர்.

எனவே மொத்தம் 816 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, அவர்களிடம் அபாரத் தொகையாக ரூ.84,62,500 செலுத்தப்பட்டன.

கடந்த ஆறு வாரங்களில் மட்டும் 4,922 வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.5,09,16,000 அபராதமாகச் செலுத்தப்பட்டன.

ஏமேலும், நிலுவையில் இருந்த 5,738  மதுபோதை வழக்குகள் தீர்க்கப்படு, ரூ.5,93,78,500 அபராதத்தொகை வசூலிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.