வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2023 (17:08 IST)

பிரதமரின் சான்றிதழ் வழக்கு -முதல்வர் கெஜ்ரவாலுக்கு அபராதம்

kejriwal
பிரதமர் மோடியின் கல்விச் சான்றிதழ் கேட்ட விவகாரத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியில் கல்வி தொடர்பாக சர்ச்சை எழுந்ததையடுத்து, இந்த விவகாரத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல்கள் கேட்டு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதினர்.

இதையடுத்து, டெல்லி பல்கலைக்கழகம், மற்றும் குஜராத் பலகலைக்கழகத்திற்கு தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக, குஜராத் பல்கலைக்கழகம் சார்பில், அலகாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்த விவரங்களை வழங்க  வேண்டுமென்று ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரதிது செய்து இன்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் பிரதமர் மோடியின் விவரங்களைக் கேட்ட முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது