1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 மார்ச் 2021 (19:11 IST)

3வது டி20 போட்டியிலும் நடராஜன் இல்லை: ரசிகர்கள் ஏமாற்றம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஏற்கனவே 2 டி20 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இன்று அகமதாபாத் மைதானத்தில் மூன்றாவது டி20 போட்டி நடைபெற உள்ளது 
 
இந்த நிலையில் சற்று முன் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து இந்திய அணி இன்னும் சில நிமிடங்களில் களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ந்நிலையில் இந்திய அணியின் வீரர்கள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய போட்டியிலும் நடராஜன் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, இஷான் கிஷான், விராத் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார், ஷர்துல் தாக்கூர், சாஹல் ஆகியோர் இன்றைய இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த 2 போட்டிகளிலும் நடராஜன் அணியில் இடம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்