வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 மார்ச் 2021 (21:54 IST)

10 ஓவர்கள், 83 ரன்கள், இரண்டே விக்கெட்டுக்கள்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது என்பது தெரிந்ததே
 
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 77 ரன்கள் ரிஷப் பண்ட் 25 ரன்கள் எடுத்தனர். இந்த நிலையில் 157 என்ற இலக்கை நோக்கி தற்போது இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது தொடக்க ஆட்டக்காரர் பட்லர் மிக அபாரமாக விளையாடிய 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அவருக்கு உறுதுணையாக பெயர்ஸ்டோ விளையாடி வருகிறார் 
 
சற்றுமுன் 10 ஓவர்களில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது இன்னும் 10 ஓவர்களில் அந்த அணி 74 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியது உள்ளதால் வெற்றியை நெருங்கி விட்டதாக கருதப்படுகிறது