புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 7 நவம்பர் 2018 (16:37 IST)

முட்டாள் தனமான செயலை செய்த மோடி: அமெரிக்க எம்.பி கடும் விமர்சனம்

சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் சிலை அமைத்திருப்பது முட்டாள் தனமானது என இங்கிலாந்தைச் சேர்ந்த எம்.பி பீட்டர் போன் விமர்சனம் செய்துள்ளார்.
 
சமீபத்தில் உலகிலேயே மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலை குஜராத் மாநிலத்தில் பிரமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. 182 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்ட இந்த சிலை 3000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு இவ்வளவு செய்ய வேண்டுமா என பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய இங்கிலாந்தைச் சேர்ந்த எம்.பி பீட்டர் போன், இந்தியா பல்வேறு திட்டங்களுக்காக கடந்த 5 ஆண்டுகளில் இங்கிலாந்திடம் இருந்து 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறது. 
 
அதனை பிரதமர் மோடி இப்படி தேவையில்லாமல் செலவு செய்திருப்பது முட்டாள் தனமானது என பீட்டர் போன் விமர்சனம் செய்துள்ளார்.