செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 6 நவம்பர் 2018 (15:37 IST)

ஏமாற்றத்தை தந்த சர்க்கார் - பிரபலத்தின் ட்விட்டால் கடுப்பான விஜய் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள சர்கார் படம் ரசிகர்களின் ஆக்ரோஷங்களுடன் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
விஜய்யின் சர்கார் படம் பல எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களாலும் சர்கார் படம் கொண்டாடப்பட்டுவருகிறது 
 
தளபதி வெறியர்கள் படத்தை பாராட்டினாலும் சிலர் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் கூறி வருகின்றனர்.
 
அப்படி ஒரு பிரபலத்தின் சர்கார் படத்தை பற்றிய மோசமான ட்விட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
அது வேறு யாரும் இல்லை பிரபல நடிகரும், நடன இயக்குனருமான சதீஷ், சர்கார் படத்தில் இடம்பெறும் ஓஎம்ஜி பொண்ணு பாடல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் அது வருத்தம் அடைய வைத்துள்ளது என கோபமான ஸ்மைலியோடு  ட்விட் போட்டுள்ளார் .
 
இந்த ட்விட்டருக்கு விஜய் ரசிகர்கள் பலரும் கொந்தளித்து வருகின்றனர்.