வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 15 ஜனவரி 2023 (13:51 IST)

நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து

nepal flight
நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நமது அண்டை நாடான  நேபாளத்தில்   பிரதமர் புஷ்பா கமல் தஹல் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இன்று, காத்மாண்டுவில் இருந்து ஒரு விமானம் பொக்காரா சென்ற நிலையில் விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகிச் சென்றது.

இதில், விமானத்தில் திடீரென்று தீப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. உடனே தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 
இந்த விமானத்தில் 68 பயணிகள், 4 விமான  ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் பயணித்தனர்,. இந்த விபத்தில், பலர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகிறது.

ஆனால், இந்த விபத்தில்  உயிரிழப்புகள்  குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.