ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 மே 2022 (12:24 IST)

நான் மர்மமான முறையில் இறந்தால்.. எப்படி இருக்கும்? – பீதியை கிளப்பிய எலான் மஸ்க்!

சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் சமீபத்தில் தன் இறப்பு குறித்து பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் பிரபலமான தொழிலதிபராக இருந்து வருபவர் எலான் மஸ்க். டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் நிறுவனரான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது வைரலானது,

இந்நிலையில் அடிக்கடி ட்விட்டரில் சில பதிவுகளை இட்டு பகீர் கிளப்பி வரும் எலான் மஸ்க் தற்போது தனது ட்விட்டரில் “நான் மர்மமான முறையில் உயிரிழந்தால்.. அது எப்படிப்பட்டதாக இருக்கும்?” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக உக்ரைனில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் ப்ராட்பேண்ட் சேவைகள் செயல்படுத்தப்பட்டது. இதே போன்று பல தொழில்நுட்ப உதவிகளை உக்ரைனுக்கு எலான் மஸ்க் செய்துள்ளார்.

இந்நிலையில் உக்ரைனுக்கு உதவியதால் எலான் மஸ்க்கிற்கு ரஷ்யா ரகசிய மிரட்டல்கள் விடுப்பதாகவும், அதனால்தான் எலான் மஸ்க் அப்படி பதிவிட்டுள்ளார் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.