1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 8 மே 2022 (14:15 IST)

விடியல் ஆட்சியிலும் தொடரும் அடக்குமுறை! பா ரஞ்சித் டுவிட்

Pa ranjith
சென்னையில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முதியவர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விடியல் ஆட்சியிலும் அடக்குமுறை தொடருகிறது என பா ரஞ்சித் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் 
 
சென்னை இளங்கோ நகர் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை அடுத்து ஆக்கிரமிப்பு செய்த வீடுகளை இடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து சமீபத்தில் வீடுகளை இடிக்க பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதன்பிறகு வீடுகள் படிப்படியாக இடிக்கப்பட்டு வருகின்றன
 
 இந்த நிலையில் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்ணெய் கேனுடன் சிலர் போராட்டம் நடத்தியதாகவும் முதியவர் ஒருவர் தீக்குளித்து தாகவும் தகவல்கள் வெளியாகிறது. இந்த சம்பவத்தை அடுத்து பா ரஞ்சித் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
விடியல் ஆட்சியிலும் தொடரும் சென்னை பூர்வகுடிகள் மீதான அடக்குமுறை! நீதி மன்ற உத்தரவு இம்மக்களுக்கு மட்டும் தானா?? மாற்று திட்டம் என்பது சென்னையை விட்டு வெளியேற்றுவது மட்டும் தானா? இம்மக்களின் உரிமையை, உணர்வை, கோரிக்கையை எப்போது யோசிக்க, மதிக்க தொடங்குவீர்கள் தமிழக அரசே? என்று பதிவு செய்துள்ளார்.