1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 6 செப்டம்பர் 2023 (12:56 IST)

நான் நலமுடன் இருக்கின்றேன்.. வதந்தி பரவிய நிலையில் நடிகை ரம்யா விளக்கம்..!

kuthu ramya
நடிகை ரம்யா மாரடைப்பு காரணமாக காலமாகிவிட்டதாக செய்திகள் பரவிய நிலையில் சற்றுமுன் அவர் ஊடகம் ஒன்றுக்கு தான் நலமுடன் இருப்பதாகவும் தன்னை பற்றி வந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார். 
 
சிம்பு நடித்த குத்து, தனுஷ் நடித்த பொல்லாதவன், சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா.
 
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கர்நாடக மாநிலத்தில் இருந்து எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக ரம்யா காலமாகிவிட்டதாக  செய்திகள் பரவியது. திரை உலகில் உள்ள முக்கிய புள்ளிகளும் இந்த  செய்தியை உண்மை என நம்பி ட்விட்டரில் பதிவு செய்தனர் 
 
ஆனால் தான் நலமுடன் இருப்பதாகவும் தன்னை பற்றி வந்த செய்திகள் முழுக்க முழுக்க வதந்தி என்றும் ரம்யா சற்றுமுன் கூறி உள்ளார்.
 
Edited by Siva