ஞாயிறு, 3 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (18:53 IST)

சந்தா செலுத்தாவிட்டாலும் புளூடிக் .. எலான் மஸ்க் அதிரடி முடிவு..!

Elon mUsk
சந்தா செலுத்துபவர்களுக்கு மட்டுமே புளூடிக் என ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் அறிவித்திருந்த நிலையில் தற்போது சந்தா செலுத்தாதவர்களுக்கும் புளூடிக் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
ஏப்ரல் இருபதாம் தேதிக்கு பிறகு சந்தா செலுத்தாதவர்களுக்கு புளூடிக் வழங்கப்படாது என எலான் மஸ்க் கூறியிருந்தார் என்பதும் ரஜினிகாந்த் முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரது புளூடிக் நீக்கப்பட்டது என்பது தெரிந்தது 
 
இந்த நிலையில் தற்போது திடீரென எலான் மஸ்க் அதிரடி முடிவை எடுத்து உள்ளார். அதில் சந்தா செலுத்தாத போதிலும் குறைந்தது ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் கொண்ட பிரபலங்களுக்கு மீண்டும் புளூடிக் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 
இதனை அடுத்து பலரது ட்விட்டர் பக்கங்களில் மீண்டும் புளூடிக் தற்போது வழங்கப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran