வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 22 ஏப்ரல் 2023 (08:30 IST)

தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் ஜியோ சினிமா! முன்னணி கலைஞர்களுக்கு வலைவீச்சு!

ஜியோ சினிமா தற்போது ஐபிஎல் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்பு வருகிறது என்பதும் இதனால் கோடிக்கணக்கான மக்கள் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை கண்டு களித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்து மாறும் சந்தா கொடுத்து விபரம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஜியோ சினிமா சந்தா வசூலித்தாலும் அது மிகவும் குறைவான கட்டணமாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் ஏற்கனவே கால்பதித்துள்ள ஜியோ சினிமா, தற்போது தமிழ் சினிமாவிலும் கால்பதிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கூட்டணியில் படங்களை தயாரிக்கும் என சொல்லப்படுகிறது. அதற்கான வேலைகளை இப்போதே தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.