ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 டிசம்பர் 2022 (09:05 IST)

இனிமேல் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் ப்ளூ டிக்! – எலான் மஸ்க் அறிவிப்பு!

elan twitter
ட்விட்டரில் ப்ளூடிக் வழங்குவதில் தொடர் சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில் எலான் மஸ்க் மீண்டும் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் ப்ளூடிக் முறைக்கு மாறியுள்ளார்.

பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதலாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. ட்விட்டரை வாங்கியதும் எலான் மஸ்க் அதிகாரப்பூர்வ ப்ளூடிக் பெறுவதற்கு கட்டணம் விதித்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

ஆனால் அதேசமயம் பல போலி கணக்குகள் கூட உருவாக்கப்பட்டு ப்ளூடிக் கட்டணம் செலுத்தி பெறப்பட்டதும் சர்ச்சையானது. இதனால் ஒட்டுமொத்தமாக ப்ளூடிக் முறையை எலான் மஸ்க் நிறுத்தி வைத்தார்.

இந்நிலையில் இன்று முதல் அதிகமான பாலோவர்களை கொண்ட அதிகாரப்பூர்வ கணக்குகள், பிரபலங்களின் கணக்குகளுக்கு மட்டும் ப்ளூடிக் வழங்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு முன்பு இதே முறை கட்டணமின்றி இருந்த நிலையில் தற்போது கட்டணத்துடன் அமலுக்கு வந்துள்ளது.