புதன், 6 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 மே 2023 (07:51 IST)

ட்விட்டர் நிறுவனத்திற்கு பெண் சி.இ.ஓ: எலான் மஸ்க் தகவல்..!

Elon mUsk
ட்விட்டர் நிறுவனத்திற்கு பெண் சிஇஓ நியமனம் செய்திருப்பதாகவும் அவர் இன்னும் ஆறு மாதங்களில் பதவி ஏற்பார் என்றும் ட்விட்டர் நிறுவனத்தின் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் அவரே சிஇயூவாகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விரைவில் புதிய சிஇஓ பதவி ஏற்பார் என எலான் மஸ்க் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ட்விட்டர்  நிறுவனத்திற்கு விரைவில் பெண் சிஇஓ பதவியேற்பார் என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் 6 வாரங்களில் ட்விட்டர் நிறுவனத்தின் பெண் சிஇஓ பதவி ஏற்பார் என எலான் மஸ்க் தெரிவித்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது அந்த பெண் சிஇஓ யார் என்பதை அறிய மில்லியன் கணக்கான ட்விட்டர் பயனாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் சிஓ ட்விட்டர் நிறுவனத்துக்கு பதவி ஏற்ற உடன் என்னென்ன மாறுதல்கள் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


Edited by Siva