திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 11 மே 2023 (22:13 IST)

ஜப்பான் நாட்டில் நிலநடுக்கம்…மக்கள் பீதி

ஜப்பான் நாட்டின் தெற்கு சிபா மாகாணத்தில் இன்று அதிகாலையில் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவாகியுள்ளது.

சமீபகாலமாக, துருக்கி, இந்தோனேஷியா, நேபாளம், சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, ஜப்பானிலும் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

ஜப்பான் நாட்டில் இன்று அதிகாலை தெற்கு சிபா மாகாணத்தில்  நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப்பதிவாகியுள்ளது.

தலைநகர் டோக்கியோவிலும், நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், இந்த நிலநடுக்கம் எதிரொலியால் தலைநகர் டோக்கியோவில் உள்ள  வணிக வளாகங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களில் லிப்ட்டுகள்  மணி நேரம் வரை நிறுத்தப்பட்டதாக கூறினர்.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.