வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (09:03 IST)

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் நிலையில் இருந்து கீழிறங்கிய எலான் மாஸ்க்… காரணம் ஒரு டிவீட்தான்!

டெஸ்லா நிறுவனத்தின் அதிபர் எலான் மாஸ்க் ஒரே ஒரு டிவீட்டால் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உலகின் நெம்பர் 1 பணக்காரர் என்ற அந்தஸ்தில் இருந்தார். அவரின் சொத்து மதிப்பு சுமார் 186 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் அவர் இப்போது அந்த இடத்தை அமேசான் நிறுவனர் ஜெஃப் பீஸோவிடம் பறிகொடுத்துள்ளார். அதற்குக் காரணம் எலான் மாஸ்க்கின் ஒரே ஒரு டிவீட்தான் என சொல்லப்படுகிறது.

சமீபத்தில் அவர் ‘பணத்தை விட பிட்காயினே சிறந்தது’ எனக் கூறி ஒரு டிவீட் செய்திருந்தார். அதனால் அவரின் நிறுவனத்தின் பங்குகள் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்தது.