1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. elan musk says no savings in future

இனிமே பணம் சேமிக்கவே தேவையில்லை - எலன் மஸ்க் கருத்துக்கு எதிர்ப்பு

elan musk
அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ் விண்வெளியில் சேட்டிலைட் அமைப்பது, சேட்டிலைட் மூலம் உலக நாடுகளுக்கு இன்டர்நெட் சேவை அளிப்பது என பல துறைகளிலும் முதலீடு செய்து வருகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இவர் நெருக்கமானவரும் கூட..

அதோடு அவ்வப்போது பல முக்கிய கருத்துகளையும் அவர் தெரிவித்து வருகிறார்.
ஏற்கனவே AI தொடர்பாக இரண்டு எலன் மஸ்க் தெரிவித்த கருத்துக்கள் உலக நாடுகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் இனிமேல் பணம் சேமிக்க வேண்டாம் என்கிற கருத்தை முன் வைத்திருக்கிறார் எலன் மஸ்க். எதிர்காலத்திற்காக பணம் சேமிப்பது அர்த்தமற்றது எனக் அவர் கூறியிருக்கிறார்..

AI மற்றும் ரோபோக்களின் வளர்ச்சியால் எதிர்காலத்தில் அனைத்து பொருட்களும், சேவைகளும் தாராளமாக கிடைக்கும் என்றும் பணத்தின் தேவையே இல்லாமல் போகும் என்றும் அவர் கூறியிருக்கிறார். சுமார் 75.5 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள எலன் மஸ்க் இப்படி கூறியிருப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு எதிர்காலத்தில் சம்பளமே இருக்காது என்று எலன் மஸ்க் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஒரே நாளில் ரூ.7100 கோடி உயர்வு - உலகப்பணக்காரர்கள் பட்டியிலில் முன்னேறிய முகேஷ் அம்பானி