1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2023 (21:43 IST)

அமெரிக்கா: கொரொனாவால் இதய நோயால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

அமெரிக்காவில் கொரொனா தொற்று ஏற்பட்ட முதலாண்டில் இதய நோயால் பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

சீனாவில் இருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு கொரொனா தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவியது.

அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்தது.  கொரொனா முதலில் தாக்குவதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டில் இந்த நாட்டில், 8,74,613 பேர்  இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இது, கொரொனா தாக்குதலுக்குப் பின் 6.2% அதிகரித்து, 9, 28,714 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கு முன்பு 2003 ஆம் ஆண்டு இதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை காட்டிலும், 2020 ஆம் ஆண்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.

இது அந்த நாட்டில் மக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.