வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (13:54 IST)

குறைந்து வரும் மக்கள் தொகை..! "நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள்" - ரஷ்ய அதிபர் வேண்டுகோள்.!!

வேலை செய்யும் இடத்தில் மதிய உணவு மற்றும் காபி இடைவெளியின் போது என நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என நாட்டு மக்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   
சுமார் 2 ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன் போரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய  வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யா நடத்தும் உக்ரைன் போருக்கு வீரர்களே கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இன்னும் நிலைமை மோசமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.   
 
இந்நிலையில் நாட்டு மக்களை அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசே அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்து வருகிறது. இது குறித்து பேசிய அதிபர் புதின்,  உக்ரைனுடன் நடந்து வரும் போரின் காரணமாக நாட்டின் மக்கள் தொகை குறைந்துள்ளதாக கூறியுள்ளார். இது தேசத்தின் எதிர்காலத்திற்கு பேரழிவு என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
வேலையில் மிகவும் பிஸியாக இருப்பது சரியான காரணம் அல்ல என்றும் இனப்பெருக்கத்திற்கு வேலை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
வேலை செய்யும் இடத்தில் மதிய உணவு மற்றும் காபி இடைவெளியின் போது என நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் கேட்டுக் கொண்டுள்ளார்.