திங்கள், 16 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (08:56 IST)

கேம்சேஞ்சர் ரிலீஸ் தெளிவின்மையால் கடுப்பான ரசிகர்கள்… வேண்டுகோள் வைத்த தமன்!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராம்சரண். சமீபத்தில் இவர் நடித்து வெளியான RRR திரைப்படம் உலக அளவில் பிரபலமான நிலையில், ராம்சரணின் அடுத்த படமான கேம்சேஞ்சர் படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார்.

இந்த படம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக உருவாகி வருகிறது. ஆனால் இதுவரை ஒரு பாடலைத் தவிர வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. படம் கிறிஸ்துமஸ்ஸுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதுபற்றியும் அதிகாரப்பூர்வ தேதி எதுவும் வெளியாகவில்லை.

இதனால் கடுப்பான ராம்சரண் ரசிகர்கள் கேம் சேஞ்சர் படக்குழுவைக் கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள படத்தின் இசையமைப்பாளர் தமன் “எதிர்மறையானக் கருத்துகளைப் பரப்புவதால் யாருக்கு நன்மை? அது படத்தைதான் பாதிக்கும். நாங்கள் 2 வருடங்களாக உங்களுக்கான சிறந்ததைக் கொடுக்க நேரம் மற்றும் உழைப்பைப் போட்டுள்ளோம்.

நீங்கள் செய்யும் இதுபோன்ற விஷயங்கள் படத்தைப் பாதிக்கும். நாம் வலுவாக வருவோம். எங்களது அடுத்த அப்டேட் சரவெடியாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.