1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Dutch Police Revenge on Drones through Eagles

கழுகுகள் மூலம் ட்ரோன்களுக்கு பதிலடி

கமுகுகள்
சிறிய ரக உளவு விமானம் ட்ரோன்களுக்குப் பதிலடி கொடுக்க கழுகுகளுக்கு டச்சு காவல்துறையினர் பயிற்சி அளிக்கின்றனர்.


 

 

இந்த வகையாக பயிற்சி அளிக்கப்பட்ட கழுகுகளை விமானநிலையங்கள், பொதுநிகழ்ச்சிகள் மற்றும் சிறைகள் ஆகிய இடங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மனிதர்களை விட 4 மடங்கு கூர்மையான பார்வை திறன் கொண்ட கழுகுகளால் நீரின் ஆழத்தில் உள்ள மீனை 1.6 கி.மீ. தூரத்தில் இருந்தே கண்டறிய முடியும் என்று சொல்லப்படுகிறது.

இதற்காக அமெரிக்கன் பால்ட் கிளாட் வகைக் கழுகுகளைத் தேர்ந்தெடுத்துள்ள டச்சு காவல்துறையினர், அதன் கால்களில் 6 செ.மீ. நீளமுள்ள இரு கத்திகளையும் தாக்குதலுக்காகப் பொருத்தியுள்ளனர். மேலும், பயிற்சியின்போது கழுகுகள் 80 சதவீத அளவுக்கு தங்கள் பணியைச் சரியாகச் செய்ததாக காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரையில்
பல பேர் உயிர் தப்பிய கதை!