வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (21:45 IST)

கர்ப்பகாலத்தில் ....தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன் - இளவரசி அதிர்ச்சி தகவல்

5 மாதக் கர்ப்பிணியாக இருந்தபோது, தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாக இங்கிலாந்து இளவரசி தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டு இளவரசர் ஹாரியும் அமெரிக்க நட்டு நடிகை மோகனும் திருமணம் செய்து கொண்டனர்.

அரச குடும்பத்தினர் என்றாலும் அவர்கள் இருவரும் அரச குடும்பத்திற்காக ஆடம்பரம் இன்றிச் சாதாரணமாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அரண்மனையில் இருந்து வ்ளியேறி தற்போது கலிபோர்னியாவில் வாழ்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி, ஓப்ரா வின்ப்ரோவுக்கு பேட்டி அளித்தனர். அப்போது மோகன் கூறியதாவது: நான் 5 மாதக் கர்ப்பிணியாக இருந்தபோது, இளவரசி கேட் என்னை அழ வைத்தார்.என் குழந்தை கறுப்ப இருக்குமென்பதால் இளவரசராக ஏற்க அரச குடும்பத்தினர் மறுத்தனர். அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன் என்னத் தெரிவித்துள்ளார். இது உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.