1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 டிசம்பர் 2021 (12:50 IST)

உலகின் முதல் காகிதமில்லா அரசாங்கம்! – துபாய் புதிய சாதனை!

உலகிலேயே 100 சதவீதம் காகிதமில்லா டிஜிட்டல் அரசாங்கமாக துபாய் மாறியுள்ளதாக அந்நாட்டு இளவரசர் அறிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் காகிதத்தின் பயன்பாட்டை குறைக்க உலக நாட்டு அரசுகள் பல தங்கள் அரசு சார் செயல்களை டிஜிட்டல் மயமாக்கி வருகின்றனர். துபாயும் முழுவதும் காகிதமற்ற அரசாங்கமாக உருவாவதற்கான 5 கட்ட திட்டத்தை கடந்த 2018ம் ஆண்டு தொடங்கியது.

இந்நிலையில் தற்போது துபாய் அரசின் 45 துறைகளும் 100 சதவீதம் காகித பயன்பாடில்லா டிஜிட்டல் அரசாக மாறியுள்ளதாக துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் தெரிவித்துள்ளார். இந்த சாதனை புதுமை, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவதற்கான பயணம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் மூலம் துபாய் அரசுக்கு ஆண்டுக்கு 2650 கோடி மிச்சப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.