1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (16:06 IST)

தப்லீக் ஜமாத் அமைப்பிற்கு தடை! சவுதி அரேபியா அதிரடி!

தூய இஸ்லாமியவாத கொள்கைகளை அடிப்படையாக கொண்டு இயங்கிவரும் தப்லீக் ஜமாத் அமைப்பிற்கு சவுதி அரேபியா அரசு அதிரடி தடை விதித்துள்ளது.

தூய இஸ்லாமியம் என்ற கருத்தாக்கத்தின் பேரில் இந்தியாவிலிருந்து வேர்விட்டு உலகம் முழுவதும் பரவியுள்ள இஸ்லாமிய அமைப்பு தப்லீக் ஜமாத். இந்தியாவில் முகமது இலியாஸ் என்பவரால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. தற்போது உலகம் முழுக்க பல நாடுகளில் தப்லீக் ஜமாத் அமைப்பு இருந்தாலும் சில நாடுகளில் இந்த அமைப்பு பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்தும் விதமாக இருப்பதாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவிலும் தப்லீக் ஜமாத் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இதை தொடர்ந்து சவுதி அரேபிய ஆதரவு நாடுகளும் தப்லீக் ஜமாத் அமைப்பை தடை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மலேசியா, சிங்கப்பூர், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் தப்லீக் ஜமாத் அமைப்பு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.