செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 20 மார்ச் 2023 (08:01 IST)

நடிகையுடன் முறையற்ற உறவு.. கைது செய்யப்படுகிறாரா டொனால்ட் டிரம்ப்?

பிரபல நடிகை ஒருவருடன் முறையற்ற உறவு கொண்டதால்  அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்ப் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவர் என்பதும் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக இருந்தது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் நடிகை ஸ்டோர்மி டேனியல் என்பவருடன் முறையற்ற உறவில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக அவர் மீது அமெரிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது அனேகமாக கைது செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் இது குறித்து கூறியபோது தான் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் அதை எதிர்த்து தேசத்தை மீட்க போராட்டங்கள் நடத்துமாறும் தொண்டர்களுக்கு அதிபர் முன்னால் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva