செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 18 மார்ச் 2023 (13:37 IST)

என் நண்பனே என்னை பப்பிற்கு கூப்பிட்டாங்க - கணவர் மறைவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் மீனா!

தமிழ் சினிமாவில் 80க்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர்  1990களில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். 
 
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த 2022ம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக காலமானார். இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை பற்றி மீனா கூறியுள்ளார்.
 
அதன்படி  " நான் இளம் நடிகையாக இருக்கும் போது அதிக ஆண் நண்பர்கள் இருந்தார்கள். 2000-ம் ஆண்டு பின்னர் தான் க்ளப்பிங், பப்பிங் போன்றது தொடங்கியது. அப்போது என் நண்பர்கள் பப்புக்கு என்னை அழைப்பார்கள். ஆனால் என்னுடைய அம்மா அங்கெல்லாம் போகக்கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிடுவார். இதனால் அம்மாவிடம் பல முறை சண்டை போட்டு இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.