வெள்ளி, 31 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified சனி, 18 மார்ச் 2023 (21:28 IST)

பிரபல இயக்குனர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை

payal gosh
பாலிவுட் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பிரபல நடிகை பாலியல் புகார் கூறியுள்ளார்.
 

பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப். இவர், பாலிவுட்டில்   நிறைய படங்களை இயக்கியும், நடித்துள்ளார். தமிழில் தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், அனுராக் காஷ்யப் மீது பிரபல நடிகை பாயல் கோஷ். இவர், சமீபத்தில், தனக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டாலோ இதற்கு இவர்தான் காரணமென்று பெயர்குறிப்பிடாமல் ஒரு கடிதம் எழுதிவைத்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  நான் தென்னிந்தியாவில், பல விருது வாங்கிய  இயக்குனர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். ஆனால்,  யாரும் என்னை தொட்டுக் கூட பேசவில்லை. ஆனால், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் உடன் இதுவரை நான் படம் பண்ணவில்லை. 3 வது சந்திப்பிலேயே என்னை அவர் கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்துவிட்டார்  என்று குற்றச்சாட்டியுள்ளார்.