1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. donald trump says america saving israel

நான் மட்டும் இல்லனா இஸ்ரேல் காலி!.. டொனால்ட் டிரம்ப் சொல்வது என்ன?...

donald netanyagu
கடந்த சில வருடங்களாகவே இஸ்ரேல் மற்ற நாடுகளின் மீது தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. இஸ்ரேல் அதிபராக நெதன்யாகு பொறுப்பேற்றவுடன் காசா, லெபனான், ஈரான் உள்ளிட்ட பல நாடுகளின் மீதும் போரை துவங்கினார். அதிலும் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 75 ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் பல ஆயிரம் குழந்தைகளும் அடக்கம். ஆனாலும் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவின் போர் வெறி அடங்கவில்லை.

ஒருபக்கம் லெபனான் மீதும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒரு பக்கம் ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கூறி அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேலும் ஈரானை தாக்கியது. இதிலிருந்து ஈரானும் இஸ்ரால் மீது தாக்குதல் நடத்தியது.

தற்போது அமெரிக்கா - ஈரானிடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. எனவே லெபனான் மற்றும் ஈரானை இஸ்ரேல் தாக்கக் கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால் நாங்கள் சுதந்திரமான நாடு.. யாருக்கும் கட்டுப்பட மாட்டோம் என இஸ்ரேல் சொல்லி வருகிறது. அதன்பின் அமெரிக்கா சொன்னதை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இல்லை.. நான் இல்லை என்றால் இஸ்ரேல் இல்லை.. நான் செய்ததை வேறு எந்த அதிபரும் செய்ததில்லை என்று ஜி7 உச்சி மாநாட்டில் ட்ரம்ப் பேசியிருக்கிறார். மேலும் ஈரானுடனான ஒப்பந்தத்திற்கு முன்னர் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை நான் விரும்பவில்லை. லெபனான் விவகாரத்தில் நெதன்யாகு அதிக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்’ என்று கூறியிருந்தார்..
அடுத்த கட்டுரையில்
நாளை சிஏ தேர்வு முடிவுகள்.. இன்று தேர்வு இணையதளம் ஹேக்.. தேர்வு எழுதியவர்களின் நிலை என்ன?