1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 29 மே 2021 (13:01 IST)

நாடுகள் ஒன்றிணைந்து சீனாவை எதிர்க்க வேண்டும்

சீனாவின் வளரும் பொருளாதாரம் மற்றும் புவிசார் வற்புறுத்தலை நாடுகள் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலியா பிரதமர் கெவின் ரட் கருத்து. 

 
மனித உரிமைகள் தொடர்பான விஷயங்களில் மேற்கத்திய நாடுகள் சீனாவை எதிர்க்கதயங்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சீனாவின் அதிகரிக்கும் ஆதிக்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு புதிய புவிஅரசியல் பாதையை நோக்கி உலக நாடுகள் சென்று கொண்டிருக்கின்றன.
 
“நாடுகளுக்கு சீனாவுடன் எதிர்ப்பு இருந்தால், தனியாக எதிர்ப்பதை காட்டிலும் பிற நாடுகளுடன் இணைந்து சீனாவை எதிர்ப்பதே சிறந்தது. அப்போதுதான் சீனா அந்த நாட்டுக்கு எதிரான இருதரப்பு கொள்கையை செயல்படுத்த இயலாது” என பிபிசியின் டாக்கிங் பிசினஸ் ஏசியா`நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.