வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 28 மே 2021 (09:00 IST)

கொரோனா வந்தது எப்படி? பைடனின் 90 நாள் கெடுவுக்கு சீனா கண்டனம்!

கொரோனா வைரஸ் குறித்த அமெரிக்க அதிபரின் உத்தரவிற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது சீனா. 

 
கொரோனா வைரஸ் சீனா தான் உருவாக்கியது என கூறப்பட்டு இதன் மீதான விவாதங்கள் நடைப்பெற்று வந்தது. இது தொடர்பான ரகசிய ஆவணங்கள் அமெரிக்க வெளியுறவுத் துறைக்குக் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. 
 
இதனிடையே, கொரோனா சீனாவில் இருந்து பரவியது குறித்த விசாரணையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தீவிரப்படுத்தும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது போலவே ஜோ பைடன் 90 நாட்களில் கொரோனா வைரஸ் உருவானது எவ்வாறு என்பது குறித்த அறிக்கையை உளவு அமைப்புகள் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். 
 
இந்நிலையில் அமெரிக்க அதிபரின் இந்த உத்தரவிற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது சீனா. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்க உளவுத்துறையின் இருண்ட முகம் உலகறிந்த விஷயம். அமெரிக்காவின் இந்த விசாரணைக்கு பின்னால் ஒரு நோக்கம் மட்டும் உள்ளது என தெளிவாக தெரிகிறது என குறிப்பிட்டு எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.