திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 16 மார்ச் 2018 (16:12 IST)

ரஷ்யாவில் வைர மழை பொழிந்த விமானம்!

ரஷ்யாவில் புறப்பட்ட சரக்கு விமானத்தில் இருந்து வைர மற்றும் தங்கம் மழை போல் பொழிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
ரஷ்யாவின் யாகுதியா பகுதியில் இருந்து புறப்பட்ட சரக்கு விமானத்தில் இருந்து சில நொடிகளில் தங்க கட்டிகள், பிளாட்டினம் மற்றும் வைரம் குவியல் குவியலாக மழை போன்று பொழிந்துள்ளது.
 
உடனே விமானம் அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த சரக்கு விமானம் சுமார் 265 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பிலான தங்கம், பிளாட்டினம் மற்றும் வைரம் ஆகியற்றை எடுத்துச் சென்றுள்ளது. 
 
இந்நிலையில் விமானத்தில் இருந்து விலைமதிப்பற்ற பொருட்கள் தொலைந்துள்ளது. இதையடுத்து விமான நிலையத்தை அதிகாரிகள் மூடியுள்ளனர். விமானம் பழுதானது தெரியாமல் சரக்குகளை ஏற்ற அனுமதித்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
 
முதற்கட்டமாக தொழில்நுட்ப அதிகாரிகளை முதற்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.