புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (16:12 IST)

கடைசி உணவு ஆர்டர் செய்த நபர்… காப்பாற்றிய டெலிவரி பாய்!

சீனாவில் உணவு ஆர்டர் செய்த நபர் கடைசி உணவு என்ற குறிப்போடு ஆர்டர் செய்துள்ளார்.

சீனாவில் உள்ள ஹெனான் மாகாணாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவு ஆர்டரில் குறிப்பாக ‘என் வாழ்க்கையின் கடைசி உணவு’ என்ற குறிப்பையும் இட்டுள்ளார். இந்நிலையில் அந்த உணவை டெலிவரி செய்ய சென்ற நபர் அவர் வீட்டில் அழைப்பு மணியை அழுத்தியும் அவர் திறக்காததால் சந்தேகமடைந்த அவர் போலிஸார் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர்கள் வந்து பார்த்தபோது வீட்டுக்குள் வந்தால் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வேன் எனக் கூறியுள்ளார். பின்னர் அவரை ஆறுதல் படுத்திய போலிஸார் அவரைக் காப்பாற்றினர். மேலும் உரிய நேரத்தில் புத்திசாலித்தனமாக யோசித்து தகவல் கொடுத்த டெலிவரி பாய்க்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.