வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (11:48 IST)

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி ஆரம்பம்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி ஆரம்பம்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி ஆரம்பமானதை அடுத்து அதனை பதிவு செய்து இருந்த வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 
 
ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ்1 என்ற மாடல் ஸ்கூட்டர் முதல்கட்டமாக வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. எஸ்1 மாடல் 99, 999 என்றும் எஸ்1  புரோ மாடல் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து தொள்ளாயிரத்து ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பதும் ஏற்கனவே இந்த ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்தவர்களுக்கு முதல் கட்டமாக டெலிவரி செய்யப்பட்டுள்ளதாகவும் ஓலா மின்சார ஸ்கூட்டர் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார் 
 
சரியாக 11 மாதங்களில் இந்த ஸ்கூட்டர் செய்து முடிக்கப்பட்டு உள்ளதாகவும் உலக தரத்தில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது டெலிவரி செய்யப்பட்டுள்ளது எடுத்து அதன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்