1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 11 அக்டோபர் 2022 (22:38 IST)

அமெரிக்க விமான நிலைய இணையதளங்களில் சைபர் தாக்குதல்

அமெரிக்காவில் உள்ள விமான நிலைய இணையதளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் மிகப்பெரிய வல்லரசு நாடு அமெரிக்கா. நினைத்ததை  நினைத்தன மாத்திரத்தில் செய்ய முடியும் என்ற வல்லமை படைத்த அமெரிக்காவில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா நாட்டின் விமான  நிலைய இணையதளங்களில் ரஷிய நாட்டைச் சேர்ந்த கிவ் நெட் என்ற ஹேக்கிங் குழு ஊடுருவி சில தகவல்கள் சேகரிக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த ஹேக்கிங் செய்த நேரத்தில் விமான நிலைய இணையதளங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின் செயல்பாட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அமெரிக்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
 
Edited by Sinoj