செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 14 ஜனவரி 2022 (15:40 IST)

உக்ரைன் அரசின் இணையதளங்கள் ஹேக்: ரஷ்யாவின் கைவரிசையா?

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வரும் நிலையில் திடீரென உக்ரைன் அரசின் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இது ரஷ்யாவின் கைவரிசை என அமெரிக்கா மற்றும் உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
மேலும் இது குறித்து அமெரிக்கா ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த எச்சரிக்கையில், ‘ உக்ரைன்  அரசின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறை உள்பட பல முக்கிய இணைய தளங்களை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர்கள் என்றும் உக்ரைன் மக்களின் தனிநபர் விபரங்களையும் கசிய விட்டு வருகிறார்கள் என்றும், இதுபோன்ற மோசமான செயல்களில் ரஷ்யா செய்தால் எதிர்வினைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது
 
கடந்த காலங்களையும் இதேபோல் உக்ரைன் மீது பல சைபர் தாக்குதலை ரஷ்யா நிகழ்த்தி உள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது